மதுரை சவுராஷ்ட்ரா பள்ளியில் மாணவர், பெற்றோருக்குப் போட்டி

மதுரை சவுராஷ்ட்ரா பள்ளியில் மாணவர், பெற்றோருக்குப் போட்டி
Updated on
1 min read

மதுரை

மதுரை சவுராஷ்ட்ரா தொடக்கப் பள்ளி, சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி, சவுராஷ்ட்ரா இருபாலர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் தடகளப்போட்டிகள் சவுராஷ்ட்ரா மேல் நிலைப் பள்ளி மைதானத்தில்நடைபெற்றன. இதில், மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் மற்றும் பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.

தடகளப் போட்டிகள் தொடக்க விழாவுக்கு சவுராஷ்ட்ரா ஹைஸ்கூல் கவுன்சில் தலைவர் எம்.என்.சங்கரன்தலைமை வகித்தார். சவு
ராஷ்ட்ரா ஹைஸ்கூல் கவுன்சில் கவுரவ செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.ஆர்.ஜெகந்நாத் முன்னிலை வகித்தார். சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.கே.ஸ்ரீனிவாசன் வரவேற்றார். தடகளப் போட்டிகளை மதுரை தெற்கு வட்டாட்சியர் டி.எம்.கோபி ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சவுராஷ்ட்ரா ஹைஸ்கூல் கவுன்சில் கவுரவ செயலாளர் ஜெகந்நாத் தலைமை வகித்தார். சவுராஷ்ட்ரா ஹைஸ்கூல் பொருளாளர் ஜி.பி.பாண்டு ரெங்கன் முன்னிலை வகித்தார்.

சவுராஷ்ட்ரா இருபாலர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.ஆர்.கண்ணன் வரவேற்றார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் டி.ஏ.ராஜகோபால் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். சவுராஷ்ட்ரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா ராணி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in