Published : 22 Oct 2019 07:15 AM
Last Updated : 22 Oct 2019 07:15 AM

இந்தியாவுக்கு போட்டியாக வர்த்தக ராக்கெட் விட சீனா முடிவு

பெய்ஜிங்:

நாட்டின் வசதிகளுக்காக பல்வேறு செயற்கோள் களை ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. அப்போது, சில நாடுகளின் செயற்கை கோள் களையும் சுமந்து, நமது நாட்டின் ராக்கெட் விண்வெளிக்கு செல்லும். இதற்கு, குறிப்பிட்ட அளவு அந்நாடு, நமது நாட் டுக்கு பணம் கொடுக்கும்.

இந்நிலையில், வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை விட சீனாவும் முடிவெடுத்துள்ளது. இதற்காக புதிய ‘லாங் ராக்கெட்’ தொடரில் ஸ்மார்ட் டிராகன் (எஸ்டி) என்ற பெயரில் வர்த்தக ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று சீனாவின் முன்னணி ராக்கெட் தயாரிப்பாளரான சீனா அகாடமி நேற்று அறிவித்தது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x