Published : 21 Oct 2019 10:39 AM
Last Updated : 21 Oct 2019 10:39 AM

மொழிபெயர்ப்பு: காலை சிற்றுண்டிக்கு முன்பு உடற்பயிற்சி செய்தால் இரட்டை பலன்- புதிய ஆய்வு

Exercising before breakfast burns twice more fat than after: Study

London

People can have better control over their blood sugar levels by changing the timing of when they eat and exercise, according to a study which may help plan lifestyle interventions to counter diabetes and reduce body weight.

The researchers, including those from the University of Bath in the UK, said that people who performed exercise before breakfast burned double the amount of fat than those who exercised after the morning meal.

It is also revealed that performing exercise in the overnight-fasted state could increase the health benefits of exercise for individuals.

The researchers conducted a six-week study involving thirty male participants classified either as obese or overweight, and compared the results from two groups -- those who ate breakfast before exercise, and those who ate after.

The study also involved a control group of participants who made no lifestyle changes, the researchers said.

While the six-week study did not lead to any significant weight loss in the participants, the researchers added that it did have "profound and positive" effects on their health since their bodies were better able to respond to insulin, keeping blood sugar levels under control, and potentially lowering the risk of diabetes and heart disease.

"Our results suggest that changing the timing of when you eat in relation to when you exercise can bring about profound and positive changes to your overall health," said co-author of the study Javier Gonzalez of the University of Bath.- PTI

காலை சிற்றுண்டிக்கு முன்பு உடற்பயிற்சி செய்தால் இரட்டை பலன்: புதிய ஆய்வு

லண்டன்

உடல் பருமனைக் குறைக்கவும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் தேவையான வாழ்க்கை முறையை திட்டமிட உதவுகிறது புதிய ஆய்வு. இதன்படி உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆகிய இரண்டுக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம்மக்கள் தங்களுடைய உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் காலை சிற்றுண்டிக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தவர்களை விடவும் சாப்பிடுவதற்கு முன்பாக உடற்பயிற்சியை செய்தவர்களுக்கு இரண்டு மடங்கு கொழுப்பு கரைந்ததாக ஆராய்ச்சியை மேற்கொண்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிலும் இரவு உணவைத் தவிர்த்துவிட்டு மறுநாள் காலை உடற்பயிற்சி செய்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல பலன் கிடைத்தது தெரிய வந்துள்ளது.

ஆறு வாரகாலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உடல் பருமன் அதிகமாக இருந்த 30 ஆண்கள் பங்கேற்றனர். சிற்றுண்டிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தவர்கள் ஒரு குழுவாகவும், சிற்றுண்டிக்குப் பிறகு உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு இரு பிரிவுக்கும் கிடைத்த முடிவுகள் ஒப்பிடப்பட்டன. இவர்களில் சிலர் வழக்கம்போல செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்த முடிவுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆறு வாரகாலத்துக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல் எடையில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கவனத்துக்குரியது. ஆனாலும், அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் ‘கணிசமான மற்றும் நேர்மறையான’ விளைவுகள் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக உடலில் இன்சுலின் சீராக சுரந்து ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், மாரடைப்பு, நீரழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு குறைந்திருக்கிறது.

‘‘எப்போது சாப்பிடுகிறீர்கள், எப்போது உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் கணிசமான மற்றும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்
றன” என்றார்.

ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பாத பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜேவியர் கான்ஜாலஸ். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x