Published : 19 Oct 2019 05:01 PM
Last Updated : 19 Oct 2019 05:01 PM

டெல்லியில் 700 பள்ளிகள் மூடலா?- துணை முதல்வர் விளக்கம்

புதுடெல்லி

டெல்லியில் பள்ளிகள் மூடப்படுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அதுகுறித்து துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 700 அங்கீகாரமற்ற பள்ளிகளை அடையாளம் கண்ட, டெல்லி கல்வித்துறை இயக்குனரகம் அவற்றை மூட முடிவெடுத்தது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிஷ் சிசோடியா, ''அங்கீகாரம் அளிக்கப்படாத தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினேன். டெல்லியில் எந்த ஒரு பள்ளியும் மூடப்படாது. டெல்லி மாநகராட்சி, பள்ளிகள் மூடப்படுவதை அங்கீகரிக்காது. டெல்லி அரசு புதிதாகப் பள்ளிகளைத் திறப்பதில்தான் நம்பிக்கை வைத்திருக்கிறதே, தவிர பள்ளிகளை மூடுவதில் அல்ல.

அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம். 'நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்'. அனைத்துப் பள்ளிகளும் இருக்கும் மாநகராட்சி, பாஜகவின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும் மாநகராட்சிப் பள்ளிகளை மூடுவதை அரசு அனுமதிக்காது'' என்று சிசோடியா தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x