Published : 18 Oct 2019 09:34 AM
Last Updated : 18 Oct 2019 09:34 AM

மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம்: தமிழகத்திலேயே முதல்முறையாக அமைப்பு

மதுரை

பள்ளி மாணவர்கள் அதிநவீன தொழில்நுட்ப முறையில் கல்விபயிலும் வகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சிபள்ளிகளில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஹைடெக் லேப்

தனியார் பள்ளிகளைப் போல் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளும் ஹைடெக் முறையில் கல்விபயில மதுரை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ் வகுப்பறை, ஹைடெக் அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவற்றை அமைத்து வருகிறது. மாநகராட்சி வி.க. மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி நிர்வாகம், தமிழகத்திலே முதல் முறையாக அமெரிக்கன் இந்தியா, ஹெச்.சி.எல்.ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து
கடந்த ஆண்டு ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைத்தது. இந்த ஆண்டு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய5 பள்ளிகளில் ஹெச்.சி.எல்., மாநகராட்சி நிர்வாகங்கள் இணைந்து மொத்தம் ரூ.44 லட்சம் மதிப்பில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களை அமைத்துள்ளன. இவற்றை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

இந்த நவீன தொழில்நுட்ப ஆய்வகம் ரோபோக்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புவசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வகத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 2,550 மாணவ, மாணவிகளுக்கு ரோபோ
மூலம் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தஆய்வகத்தில் சுய கற்றல் முறை, நடைமுறை நவீன கல்வி, சூழ்நிலைகளில் மாணவர்களின் திறன் வெளிப்பாடு, அதை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

சிக்கல் பகுப்பாய்வு, தீர்வு வடிவமைப்பு, விமர்சன சிந்தனை மற்றும்ஒத்துழைப்பு போன்ற 21-ம் நூற்றாண்டு திறன்களைக் கொண்ட மாணவர்களாக அவர்களை தயார்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விசாகன் கூறினார்.

தொடக்கவிழா நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் பொ.விஜயா,அமெரிக்கன் இந்தியா நிறுவனத்தின் இந்திய இயக்குநர் மேத்யூஜோசப், ஹெச்.சி.எல். நிறுவன இயக்குநர் நிதிபுந்திர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x