Published : 18 Oct 2019 08:02 AM
Last Updated : 18 Oct 2019 08:02 AM

குத்துச்சண்டை போட்டியின்போது காயமடைந்த அமெரிக்க வீரர்  உயிரிழப்பு

சிகாகோ

விளையாட்டுகள் சில நேரங்களில் விபரீதமாகவும் முடிந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. குத்துச்சண்டை போட்டியின்போது தலையில் காயமடைந்த அமெரிக்க வீரரான பாட்ரிக் டே என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பாட்ரிக் டே (27 வயது). இவர் தேசிய அளவிலான போட்டியில் 2 முறை பட்டம் வென்றவர். கடந்த சனிக்கிழமையன்று, இவருக்கும் சார்லஸ் கான்வெல் என்பவருக்கும் இடையே குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் 10-வது சுற்றில் கான்வெல் தலையில் தாக்கியதில் பாட்ரிக் டே நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து பாட்ரிக் டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தச் சிகிச்சை பலனளிக்காததைத் தொடர்ந்து பாட்ரிக் டே நேற்று உயிரிழந்தார்.

பாட்ரிக் டேயின் மறைவு தன்னை மிகவும் பாதித்துள்ளதாக சார்லஸ் கான்வெல் தெரிவித்துள்ளார். போட்டியின் ஒரு பாகமாகவே தான் பாட்ரிக்கை தாக்கியதாகவும், அது இப்படி விபரீதமாக முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் சார்லஸ் கான்வெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆகவே மாணவர்களே, இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படாமல் இருக்க நீங்களும் விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x