Published : 18 Oct 2019 07:27 AM
Last Updated : 18 Oct 2019 07:27 AM

ஜம்மு காஷ்மீரில் போக்குவரத்து சேவை கடைகள் திறப்பு

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு, தனியார் போக்குவரத்துகள் இயங்க தொடங்கியுள்ளன.

ஜம்மு - காஷ்மீருக்கு, மத்திய அரசு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, திரும்ப பெறப்பட்டது. இதனால், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கடந்த 2 மாதங்களாக தற்காலிகமாக முடக்கப்பட்ட செல்போன் சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வரலாம் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், லால் சவுக் எனப்படும் முக்கிய வணிக வளாகம், மார்க்கெட் ஆகியவை நேற்று 75 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. அதேபோல், டிஆர்சி சவுக்கில் இருத்து போலோசாலை வரை தனியார் போக்குவரத்து சேவைகளும் துவங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ரிக்‌ஷா, நகருக்குள்ளே ஒடும் பயணிகள் வண்டிகள் போன்ற சிறிய வகை பயணிகள் வண்டிகளும் ஓடத்தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x