

கொழும்பு
இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்த உள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்தா தேஷப்ரியா கூறியதாவது: இலங்கை மாகாணத்தின் அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ளது. இலங்கையில் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் மின்னணு வாக்களிப்பு முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதற்காக இந்திய அரசிடம் உதவி கேட்கவுள்ளோம்.