Published : 17 Oct 2019 04:29 PM
Last Updated : 17 Oct 2019 04:29 PM

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் 69% குழந்தைகள்: யுனிசெஃப் அதிர்ச்சித் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 69% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக யுனிசெஃப் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

* 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் ஒவ்வோர் இரண்டாவது குழந்தையும் சில வகை ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
* 35 சதவீதக் குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* குறிப்பிட்ட உறுப்பு பலவீனத்தால் (wasting) 17% பேரும் அதிக எடையால் 2% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* 6 முதல் 23 மாதம் வரையிலான குழந்தைகளில் 42% பேருக்கு மட்டுமே போதிய இடைவெளியில் உணவு ஊட்டப்படுகிறது.
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 69% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கின்றனர்.
* 6 முதல் 8 மாதம் வரையிலான குழந்தைகளில் 53% பேருக்கு மட்டுமே இணை உணவுகள் சரியான நேரத்துக்கு வழங்கப்படுகின்றன.

* இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு இரண்டாவது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
* ரத்த சோகையால் வளரிளம் சிறுவர்களைக் காட்டிலும் வளரிளம் பருவ சிறுமிகள் இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
* இந்தியக் குழந்தைகள் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், நீரிழிவுக்கான அறிகுறிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.
* 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நுண் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர்.
* ஒவ்வொரு ஐந்தாவது குழந்தையும் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு 3 குழந்தையிலும் ஒரு குழந்தை, வைட்டமின் பி12 பற்றாக்குறையோடு உள்ளது.

* இந்திய நகரங்கள் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனி கலாச்சாரத்துக்கு மாறி வருகின்றன. இது குழந்தைகளின் உணவுத் தேர்வுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தக் கலாச்சாரம் கிராமப்புறங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
* வருமானம் உயர்ந்த சூழலிலும் புரோட்டீன், நுண் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை குழந்தைகளிடத்தில் அதிகரித்துள்ளது.
* இந்தியாவின் ஒட்டுமொத்த 77 சதவீத பதப்படுத்தப்பட்ட உணவு விற்பனை, வெறும் 100 பெரு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x