Published : 17 Oct 2019 10:42 AM
Last Updated : 17 Oct 2019 10:42 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: காற்று போன கால்பந்தா?

ஜி.எஸ்.எஸ்.

ஒரு விடுமுறை நாளில் தெருவில் சந்திக்கும் வாசுவும், பிரவீனும் விளையாட்டு குறித்து உரையாடுகிறார்கள்.

Vasu - I like cricket. What sports are you interested?
Praveen - Football only.
Vasu - Are you playing football today?
Praveen - No.
Vasu - Why?
Praveen - There is no wind in football.
Vasu - Where are you playing football?
Praveen - In my playground.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

What sports are you interested? என்று கேட்கப்படுகிறது. In what sports are you interested? என்று அந்தக் கேள்வியை மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு விடையாக football என்று சொன்னால் போதும். Football only என்பது தேவையற்றது.

There is no wind in football என்கிறான் பிரவீன். அதாவது கால்பந்தில் உள்ள காற்று இறங்கி விட்டதால் அதற்குள் காற்று இல்லை என்பதை அவன் குறிப்பிடுகிறான். Wind என்றால் காற்றுதான். Air என்றாலும் காற்றுதான். ஆனால், wind என்பது அசைந்து செல்லும் காற்றை குறிக்கிறது. எனவே there is no air in football என்று குறிப்பிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால்பந்தை இவன் குறிப்பிடுவதால் there is no air in our football என்று குறிப்பிடலாம்.

கால்பந்து எங்கு விளையாடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு “In my playground” என்று பதிலளிக்கிறான் பிரவீன். அந்த மைதானத்துக்கு அவன்உரிமையாளர் என்பதுபோன்ற பொருள்தொனிக்கிறது. “In the playground near our house” என்றோ, “In the playground which is near my locality” என்றோ அவன் பதிலளித்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x