

ஜோஹர் பாஹ்ரு:
சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், ஜப்பான் அணி 4-3 என்ற கோல்கணக்கில் இந்தியாவை வென்றது.
மலேசியாவில் உள்ள ஜோஹர் பாஹ்ரு நகரில் சுல்தான் ஆஃப் பாஹ்ரு கோப்பைக்கான ஜூனியர் (இளையோர்) ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்கிழமை நடந்த போட்டியில் ஜப்பானை எதிர்த்து இந்தியா ஆடியது. இப்போட்டியில் ஜப்பான் வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இந்திய வீரர்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 4-3 என்ற கோல்கணக்கில் இந்தியாவை வென்றது.