Published : 14 Oct 2019 07:59 AM
Last Updated : 14 Oct 2019 07:59 AM

கேந்திரிய பள்ளி மாணவர்களுக்கு கதர் ஆடை

சென்னை

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (கேவிஎஸ்) இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 1,225 பள்ளிகளில் ஏறத்தாழ 13 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கட்டம் போட்ட சட்டை, பாவாடை மாணவிகளுக்கும், சட்டை, டிரவுசர்கள் மாணவர்களுக்கும் சீருடையாக உள்ளன. இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா அமைப்பு, மாணவர்களுக்கு கதர் சீருடையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x