Published : 11 Oct 2019 11:21 AM
Last Updated : 11 Oct 2019 11:21 AM

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரை இறுதியில் மேரி கோம்

உலன் - உடே

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள உலன் -உடே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த கால் இறுதிப் போட்டியில் கொலம்பியா நாட்டு வீராங்கனையான வாலென்சியா விக்டோரியாவுடன் இந்தியாவின் மேரி கோம் மோதினார். இப்போட்டியில் மேரி கோம் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அரை இறுதிச் சுற்றுக்கு மேரி கோம் தகுதி பெற்றார். இதன் மூலம் இப்போட்டியில் மேரி கோம், ஏதாவது ஒரு பதக்கத்தை வெல்வது உறுதியாகி விட்டது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெல்லும் 8-வது பதக்கமாகும் இது.

இதில் 6 முறை அவர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார். -பிடிஐகொலம்பிய வீராங்கனை வாலென்சியா விக்டோரியாவை சரமாரியாக தாக்குகிறார் மேரி கோம் (இடது). படம்: பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x