

ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 400 அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவல் மற்றும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வரும் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு இயல்பு நிலை திரும்பும் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் தொடங்கும் என மத்திய அரசு நம்புகிறது. அரசியல் தலைவர் களை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.