Published : 10 Oct 2019 08:01 AM
Last Updated : 10 Oct 2019 08:01 AM

தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை விடுமுறை

சென்னை

தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை (அக்டோபர் 26) விடுமுறை விடப்படுவதாகவும், தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமை அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று விடுமுறை விடுவதற்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. தமிழ்நாட்டில் அன்றைய ஒரு தினம் மட்டும்தான் விடுமுறை. தமிழக அரசு காலண்டரிலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அக்டோபர் 27-ம் தேதி விடுமுறை என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து தமிழக கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஒரு கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 210 வேலை நாட்கள் இருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

ஆனால், தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுந்திருந்தனர். அக்டோபர் 26 (சனிக்கிழமை) அன்று விடுமுறை விட்டால் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று திரும்ப வசதியாக இருக்கும் என்று அவர்கள் வலியுறுத்திருந்தனர். தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அக்டோபர் 26-ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில்‘‘இந்த விஷயம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்து பிறகு தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். பள்ளிக்கல்வி்த்துறை அதிகாரி
களிடம் கேட்டபோது "தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை விடுமுறை விடலாமா என்று அரசிடம் அனுமதி கேட்டிருந்தோம்.

மாணவர்களும், ஆசிரியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக அக்டோபர் 26-ம்தேதி அன்று விடு
முறை விடவும், 28-ம் தேதி (திங்கள்கிழமை) அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் சிறப்பு அனுமதிபெற்று விடுமுறை விடவும் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். " என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x