Published : 09 Oct 2019 10:55 AM
Last Updated : 09 Oct 2019 10:55 AM

பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள்

கோவை

கோவையை அடுத்த வட்டமலைப் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான திறன் போட்டிகள் ('கிரியாஃபெஸ்ட்-2019') நடக்கின்றன. இது குறித்து ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் முதல்வர் பி.எல்.சிவகுமார் கூறியதாவது:

9, 10-ம் வகுப்பு மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், 5 வகையான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குடிநீர் பாதுகாப்பு, கல்வியில் செல்போனின் தாக்கம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெறுகிறது. 5 பக்கங்கள் அளவில் கட்டுரைகள் எழுதி, மாணவர்கள் 12-ம் தேதிக்குள் 'ஒருங்கிணைப்பாளர், கிரியாஃபெஸ்ட்-2019, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, வட்டமலைப்பாளையம், கோவை' என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இயற்கையின் கொடை, சுற்றுச்சூழல் மாசு, மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெரு என்ற தலைப்பில் புகைப்பட போட்டி நடக்கிறது. மாணவர்கள் சிறந்த புகைப்படங்களை creafest@srptc.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.srptc.ac.in/creafest.html என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை 97893-50600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 16-ம் தேதி மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் எஸ்என் ஆர் குழுமங்களின் தலைமை வணிக அதிகாரி ஸ்வாதி ரோஹித் தலைமை வகிக்கிறார். தேசிய மாணவர் கமாண்டன்ட் எல்சிஎஸ் நாயுடு, லெப்டினன்ட் கர்னல் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x