Published : 08 Oct 2019 04:39 PM
Last Updated : 08 Oct 2019 04:39 PM

மொழிபெயர்ப்பு: இந்தியாவின் முதல் கழிப்பறை கல்லூரியில் பயிற்சி முடித்த 3,200 பேருக்கு வேலை

India's first 'toilet college' trains 3,200 sanitation workers

New Delhi

Around 3,200 sanitation workers have been trained in a year at what has been dubbed as the country's first 'toilet college' and secured placement under a private sector initiative.

The 'Harpic World Toilet College' located in Aurangabad, Maharashtra is helping sanitation workers by uplifting their work quality, educating them about the hazards that they are exposed to and eliminating these inhuman practices.

The college, set up in August 2018, is run by British consumer goods major Reckitt Benckiser.

"Since its launch, the college has successfully trained 3,200 sanitation workers and helped secure sustainable employment opportunities for 100 per cent of the candidates," Reckitt Benckiser said in a statement.

PTI

*

மொழிபெயர்ப்பு

இந்தியாவின் முதல் கழிப்பறை கல்லூரியில் பயிற்சி முடித்த 3,200 பேருக்கு வேலை

புதுடெல்லி
இந்தியாவின் முதல் கழிப்பறை கல்லூரியில் ஓராண்டில் 3,200 பேர் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், ‘ஹார்பிக் வேர்ல்ட் கழிப்பறை கல்லூரி’ கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், பணியின் போது ஏற்படும் ஆபத்துகளை அவர்கள் புரிந்து கொள்ளவும், கழிவுகளை நீக்கும் மனிதாபிமானமற்ற நடைமுறையை ஒழிக்கவும் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இந்தக் கல்லூரியை பிரிட்டனை சேர்ந்த நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல ‘ரெக்கிட் பென்கிசர்’ நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

இதுகுறித்து ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த ஓராண்டில் 3,200 துப்பரவுப் பணியாளர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரபலமான தேசிய மற்றும் உள்ளூர் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த பணியாளர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x