Published : 08 Oct 2019 03:48 PM
Last Updated : 08 Oct 2019 03:48 PM

உலக கோப்பை தகுதிச் சுற்றுக்காக இந்திய கால்பந்து அணி தீவிர பயிற்சி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்றில் விளையாடும் இந்திய கால்பந்து வீரர்கள், குவாஹாட்டியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகத்தார் நாட்டில் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஆடும் அணிகளை தேர்ந்தெடுப்பதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று போட்டி கொல்கத்தாவில் வரும் 15-ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தற்போது குவாஹாட்டியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 12-ம் தேதி வரை அவர்கள் இங்கு பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, அவர்கள் பயிற்சிக்காக குவாஹாட்டி வந்து சேர்ந்தனர். பயிற்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் கூறியதாவது:வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பைநிறைவேற்றும் வகையில் நமது வீரர்கள்சிறப்பாக ஆடுவார்கள். 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கால்பந்து அணி கொல்கத்தாவில் ஆடவுள்ளது.

இப்போட்டியைக் காண ஏராளமானரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கைஉள்ளது. அவர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குவோம். இவ்வாறு இகோர் ஸ்டிமேக் கூறினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x