திறன் 365: தலைவாரிப் பூச்சூடு

எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.
எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.
Updated on
2 min read

வகுப்பறை என்பது குழந்தை களுக்கானது. அப்படி என்றால், குழந்தைகளுக்குப் பிடித்தச் செயல்கள் இருக்க வேண்டும் தானே! சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகம்பார்க்கும் கண்ணாடிமுன் நிற்க விரும்புவார்கள். ஒவ்வொருவருக்கும் தம்மை அழகுப்படுத்தப் பிடிக்கும். அதுவும் பதின்பருவக் குழந்தைகளுக்குக் கூறவே வேண்டாம்.

கண்ணாடி செயல்பாடு: கண்ணாடி செயல்பாட்டை குழந்தைகளுக்கு வகுப்பறையில் தருவோம்.முதலில் ஆசிரியர் தன் முகத்தைச்சுழித்துப் பாவனை செய்ய, மாணவர்கள் அதே முகப்பாவனையைச் செய்ய வேண்டும். பின்பு, இருவர் இருவராக நிற்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இணையும், கொஞ்சம் தள்ளித் தள்ளி நிற்கச் செய்ய வேண்டும். ஒருவர் கண்ணாடியாகச் செயல்பட வேண்டும். மற்றொருவர் கண்ணாடி முன்நின்று பாவனைகளைச் செய்ய வேண்டும். அதுசிரிப்பாக இருக்கலாம், கோபமாக இருக்கலாம். இரக்கமாக இருக்கலாம், கவலையாக இருக்கலாம். கண்ணாடியாகச் செயல்படுபவர் அவர் செய்த அந்தச் செயலைத் திரும்பச் செய்ய வேண்டும். இதனால் என்ன பயன்?

சுய விழிப்புணர்வு: குழந்தைகள் தங்கள் சொந்த உடல் அசைவுகள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள கண்ணாடி செயல்பாடு உதவுகிறது. இது அவர்களின் சொந்த நடத்தை, உணர்ச்சிமற்றும் எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற் கும் உதவுகிறது. மேலும், அவர்களின் திறனை மேம்படுத்துகிறது.

குழந்தைகள் கண்ணாடி செயல்பாட்டில் ஈடுபடும்போது,​அவர்கள் வெவ்வேறு முகபாவனைகள் மற்றும் உடல் மொழியை அடையாளம் காணவும், விளக்கவும் கற்றுக் கொள்கிறார் கள். இது சிறந்த தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது, ஏனெனில் அவர்கள் சொற்கள் அல்லாத குறிப்புகளை விளக்குவதற்கும் பதிலுக்கு தங்களைவெளிப்படுத்துவதற்கும் மிகவும்திறமையானவர்களாக மாறுகிறார் கள்.

படைப்பாற்றலை வளர்க்கும்: கண்ணாடிச் செயல்பாடு கற்பனைவிளையாட்டுக்கான ஒரு கருவியாகப்பயன்படுத்தப்படலாம், இது குழந்தைகள் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கிறது. இது படைப்பாற்றலை வளர்க்கும் மற்றும் அவர்களின் கற்பனையை விரிவுபடுத்தும்.

குழந்தைகள் கண்ணாடியில் தங்களைக் கவனித்துக் கொண்டு வெவ்வேறு அசைவுகளைப் பயிற்சி செய்வதால், அவர்கள் தங்கள் திறன்களில் நம்பிக்கையை வளர்க்க முடியும். இது சுயமரியாதை மற்றும் உடல் உருவத்தை மேம்படுத்தவதற்கு வழிவகுக்கும். மொழிப்பாடங்களில் ஒரு பாடல், கதை ஆகியவற்றை நடத்தி முடித்தவுடன், அப்பாடலில் இடம் பெற்ற நபர், செயல், பாடல் பொருள் குறித்து கண்ணாடி முன்பு நின்று செய்துகாட்டச் செய்யலாம்.

பாரதிதாசனின் ”தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…” என்ற பாடலுக்கு, அதன் பொருளை உணர்த்தும்படி கண்ணாடி முன்பு நடித்துக் காட்டச் செய்யலாம். ஒரு குழந்தை அழகாகத் தலையை வாரி, பூச்சூடி, பின்பு புத்தகப்பையைத் தூக்கிச் செல்லும். கண்ணாடியாக உள்ளவரும் அச்செயலை செய்வார். சில நேரங்களில் யார் கண்ணாடி என்பதை பார்வையாளராக உள்ள பிற மாணவர்கள் அறிய முடியாது. இப் படிக் குழந்தைத் தலையை வாரி, பூச்சூடும் போது, பார்வையாளராக உள்ள பிற மாணவர்கள் அந்தச் செய்கைக்கு ஏற்ப பாடல் வரிகளைப் பாடிக்காட்டுவார்கள்.

இச்செயல்பாடு, குழந்தைகளில் சுய விழிப்புணர்வு, தகவல் தொடர்பு, மோட்டார் திறன் மேம்பாடு, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான கருவியாக இருக்கும். ஆகவே, நீங்களும் குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரிய ஆசிரியராக மாறுவீர்கள். முயற்சிசெய்து பாருங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in