மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற செயலியில் விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற செயலியில் விண்ணப்பிப்பது எப்படி?
Updated on
1 min read

சென்னை: அரசு பள்ளி மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் பெற TNSED Schools என்ற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: அரசுப் பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பு மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர் அனுமதி வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை செயலியில் நுழைந்து பள்ளி விவரம், மாணவர் பெயர், எந்த வகுப்பு, முகவரி, பஸ் வழித்தட எண், மாணவர் பஸ் ஏறும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட விவரங்களை வகுப்பு ஆசிரியர் பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் சமீபத்திய புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களின் பதிவுகளை சரிபார்த்து அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in