மதுரை மாநகரில் ரூ.76 கோடியில் அழகாகும் வைகை ஆறு!

அழகுபடுத்தப்பட உள்ள வைகை ஆற்றின் மாதிரி தோற்றம்.

அழகுபடுத்தப்பட உள்ள வைகை ஆற்றின் மாதிரி தோற்றம்.

Updated on
2 min read

மதுரை: மதுரை மாநகரில் கோச்சடை முதல் விரகனூர் மதகு அணை வரையிலான 14 கி.மீ. வைகை ஆற்றின் இரு கரைகளையும் அழகுபடுத்தி மக்கள் ரசிக்கவும், பொழுது போக்கவும், நீரோட்டத்தை சீராக்கவும் உலக வங்கி உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம், ரூ.76.16 கோடியில் மேம்படுத்த உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. 240 கி.மீ. பயணித்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலந்து, பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் இரு கரைகளையும் தொட்டபடி வைகையில் தண்ணீர் சென்றது. தற்போது கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும், கழிவுகளைக் கொட்டும் கிடங்காகவும் மாறி விட்டது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளராக சித்ரா வந்தபிறகு, வைகை ஆற்று கரைகளில் இறைச்சிக் கழிவுகள், குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆறு கரைகளில் ‘ஏஐ’ ‘கேமரா’க்களை பொருத்தி குப்பை கொட்டுவதை கண்காணித்து வைகை ஆற்றை முழுமையாக பாதுகாக்க ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

ஆனாலும், பொதுப்பணித் துறையின் பாராமுகத்தால் வைகை ஆற்றுக்குள் முட்புதரும், ஆகாயத் தாமரையும், நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும் வளர்ந்து அடர்ந்த காடு போல காணப்படுகிறது.

<div class="paragraphs"><p>வைகை ஆற்றின் கரையில் அமைக்கப்பட உள்ள வியூ பாயின்ட் மாதிரி.</p></div>

வைகை ஆற்றின் கரையில் அமைக்கப்பட உள்ள வியூ பாயின்ட் மாதிரி.

கடந்த காலத்தில் மணல் அள்ளிய இடங்கள், குண்டும் குழியுமாகவும், அபாயகரமான பள்ளத் தாக்காகவும் காணப்படுகின்றன. வைகை ஆறு மூலம் மாநகரின் நிலத்தடி நீரை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் மதுரை மாநகராட்சி, உலக வங்கி உதவியுடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிதி மூலம் ரூ.76.16 கோடியில் சிறப்புத் திட்டம் தயார் செய்துள்ளது.

இதுகுறித்து பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோச்சடை முதல் விரகனூர் மதகு அணை வரையிலான 14 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் இரு கரைகளும் நீரோட்டத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் அழகுப் படுத்தப்பட உள்ளது.

கோச்சடையில் வைகை கரையில் சுமார் 14 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. இந்த இடத்தில் 8 ஏக்கரில் வண்டியூர் பூங்கா போன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் பிரம்மாண்ட பூங்கா அமைகிறது.

வண்டியூர் பூங்காவில் உள்ள பொழுதுப்போக்கு அம்சங்கள் அத்தனையையும் இந்தப் பூங்காவில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஆற்றின் கரைகளில் இடம் உள்ள பகுதிகளில் சிறு பூங்காக்கள், பெண்களுக்கான ஜிம், யோகா மையம், வைகை ஆறு வியூ பாயின்ட், ஆற்றில் தண்ணீர் வந்தால் கீழே இறங்கி நீராட படித்துறைகளும் அமைக்கப்பட உள்ளன.

இரவிலும் வைகை கரை சாலைகளில் மக்கள் அச்சமின்றி நடமாட இரவைப் பகலாக்கும் அலங்கார ஹைடெக் மின் விளக்குகள் அமைக்கப்படும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதைப் பார்ப்பதற்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் தலா 50 பேர் வரை அமரக்கூடிய வகையில் 2 நிரந்தர பார்வையாளர் மாடம் அமைக்கப்படும்.

வைகை ஆறு முற்றிலும் சீரமைக்கப்பட்டு அழகுப்படுத்தும் பணிகளுக்கு பொதுப்பணித் துறையிடம் தடையில்லா சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>அழகுபடுத்தப்பட உள்ள வைகை ஆற்றின் மாதிரி தோற்றம்.</p></div>
அரிசி மூட்டைகளுக்கிடையே பதுக்கி வைத்து ரூ.2.65 கோடி கஞ்சா கடத்திய 2 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in