2-வது சீசனுக்காக கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ட்ரீ டெய்லியா

இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ட்ரீ டெய்லியா மலர்கள்.

இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ட்ரீ டெய்லியா மலர்கள்.

Updated on: 
1 min read

பழநி: கொடைக்​கானலில் 2-வது சீசனை வரவேற்​கும் வித​மாக பூத்​துக்​குலுங்​கும் ட்ரீ டெய்​லியா, செர்ரி பூக்​கள் சுற்​றுலாப் பயணிகளை வெகு​வாக கவர்ந்து வரு​கின்​றன.

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்​கப்​படும் கொடைக்​கானலில் கடந்த ஏப்​ரல் முதல் ஜூன் மாதம் வரையி​லான கோடைகால சீசன் நடந்து முடிந்​துள்​ளது. நேற்று முன்​தினம் (நவ.1) முதல் 2-வது சீசன் தொடங்கி உள்​ளது. தொடர் மழை காரண​மாக கொடைக்​கானல் முழு​வதும் பசுமை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இந்தாண்டு முன் கூட்டியே பனிக்காலம் தொடங்கி உள்ளது. இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. கொடைக்கானலில் குளிரைத் தாங்கும் ஆயத்த ஆடைகள் விற்பனையும் களை கட்டியுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் அரிய வகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன.

அந்த வகையில், 2-வது சீசனை வரவேற்கும் விதமாக செர்ரி மரங்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. இதேபோல், ட்ரீ டெய்லியா, பைன் செட்டியா ஆகிய மலர்களும் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ட்ரீ டெய்லியா மலர்கள்.

<div class="paragraphs"><p>இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ட்ரீ டெய்லியா மலர்கள்.</p></div>
“கள்ள வாக்குகள் மூலம் தேர்தலை கைப்பற்ற விரும்புகிறது காங்கிரஸ்” - அமித் ஷா

X