வண்டலூர் உயிரியல் பூங்காவை ரூ.1.85 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை

வண்டலூர் உயிரியல் பூங்காவை ரூ.1.85 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: வண்டலூர் உயி​ரியல் பூங்​கா ரூ.1.85 கோடி​யில் மேம்​படுத்தப்பட உள்ளது. தென்​கிழக்கு ஆசி​யா​விலேயே பெரிய உயி​ரியல் பூங்​காக்​களில் வண்​டலூர் உயி​ரியல் பூங்கா​வும் ஒன்​று.

இப்​பூங்கா 602 ஹெக்​டேர் பரப்​பள​வில், வன விலங்​கு​களுக்கு உகந்த இயற்​கை​யான வன சூழலில் அமைந்​துள்​ளது. இப்​பூங்​கா​வில் 137 விலங்​கினங்​களை சேர்ந்த 1600-க்​கும் மேற்​பட்ட விலங்​கு​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இப்​பூங்கா​வுக்கு தமிழகம் மட்​டுமல்​லாது பிற மாநிலங்​களில் இருந்​தும் பார்​வை​யாளர்​கள் வந்து செல்​கின்​றனர். சென்​னை, புறநகர் பகு​தி​களில் குழந்​தைகளின் முக்​கிய பொழுது​போக்​கிட​மாக வண்​டலூர் பூங்கா உள்​ளது. சென்​னைக்கு வரும் வெளி​நாட்​டினர் பார்​வை​யிடும் முக்​கிய இடமாக​வும், இப்​பூங்கா திகழ்​கிறது.

இங்கு ஆண்​டுக்கு சராசரி​யாக 12 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பார்​வை​யாளர்​கள் வந்து செல்​கின்​றனர். இதன் மூலம் பூங்கா நிர்​வாகத்​துக்கு ரூ.25 கோடிக்கு மேல் வரு​வாய் கிடைக்கிறது.

பார்​வை​யாளர்​களை ஈர்க்​க​வும், அவர்​களுக்​கான வசதி​களை அதி​கரிக்​க​வும் இப்​பூங்​காவை ரூ.1.85 கோடி​யில் மேம்​படுத்தவும் பூங்கா நிர்​வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

இதன்​படி, பழைய ஓவி​யங்​களை புதுப்​பிப்​பது, கல் ஓவி​யங்​களை வரைவது, தடுப்​பு​களுக்கு வண்​ணம் தீட்​டு​வது, மீட்​கப்​பட்ட விலங்​கு​கள் பராமரிப்பு மையத்​தில் உள்ள சிங்​கம், சிறுத்தை அடைப்​பிடங்​களை சீரமைப்​பது, மழைநீர் வடி​கால் வசதி​கள் ஏற்​படுத்​துதல், அனைத்து கழி​வறை​களை​யும் தூய்​மை​யாக பராமரித்​தல், சிசிடிவி கண்​காணிப்பு முறையை மேம்​படுத்​து​வது, பார்​வை​யாளர் ஓய்​வறை​களை புதுப்​பித்​தல் உள்​ளிட்ட பணி​களை மேற்​கொள்ள பூஙகா நிர்​வாகம் நடவடிக்​கை எடுத்​து வருகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்காவை ரூ.1.85 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தெற்கு ரயில்வேக்காக 40 எல்எச்பி பெட்டிகள் தயாரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in