நாட்றம்பள்ளி - தெக்குப்பட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் மரகத பூஞ்சோலை!

நாட்றம்பள்ளி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ரூ.24 லட்சம் செலவில் உருவாகி வரும் மரகத பூஞ்சோலை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

நாட்றம்பள்ளி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ரூ.24 லட்சம் செலவில் உருவாகி வரும் மரகத பூஞ்சோலை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

Updated on
2 min read

வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பில் உருவாகி வரும் மரகத பூஞ்சோலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழக வனத்துறை சார்பில் கிராமப் புற பகுதிகளில் பசுமை போர்வையை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்வதற்காக ‘மரகத பூஞ் சோலைகள்’ திட்டம் கொண்டு வரப் பட்டன.

இத்திட்டத்தின் கீழ் 100 கிரா மங்களில் தலா 1 ஹெக்டேர் பரப்பளவில் வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் சிறிய அளவிலான காடுகள் (மினி வனங்கள்) உருவாக்க தமிழக வனத்துறை திட்டமிட்டது. கிராமப்புற பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரூ.25 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டன. மரகத பூஞ்சோலைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 இடங்களில் மரகத பூஞ்சோலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெக்குப்பட்டு ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பில் உருவாகி வரும் மரகத பூஞ்சோலை பார்வையாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது. கடந்தாண்டு மார்ச் மாதம் 2.50 ஏக்கர் பரப்பளவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த மரகத பூஞ்சோலையில் 16 வகையைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்திழுக்கும் வகையில் இந்த மரகத பூஞ்சோலை உருவாக்கப்பட்டு வருகிறது.

தெக்குப்பட்டு ஊராட்சி நிர்வாகமும், வாணியம்பாடி வனத்துறையினரும் இணைந்து இந்த பூஞ்சோலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2.50 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் மரகத பூஞ்சோலையை சுற்றிலும் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரகத பூஞ்சோலையில் மரங்கள் நடுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், பல்லுயிர் சூழலை மேம்படுத்தும் இடமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பார்வையாளர் கூடம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடிமரம், எரிபொருள், தீவனம், காய், கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை அனைத்து மரகத பூஞ்சோலைகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.

மரகத பூஞ்சோலையின் உள்ளே பார்வையாளர்கள் கோடை காலங்களில் உட்கார்ந்து ரசிக்க கொட்டகை யுடன் கூடிய கூடாரமும், ஆங்காங்கே பார் வையாளர்கள் இளைப்பாற சிமென்ட் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோடை காலங்களில் வண்ணத்து பூச்சிகள் கூட்டமாய் வந்து வட்டமிட "வண்ணத்து பூச்சிகள் வளாகம்" உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில் குடிநீர் தொட்டியுடன் வண்ண, வண்ண பூக்கள் நிறைந்த செடிகள் நடப்பட்டு பூஞ்சோலையை மேலும் அழகுப்படுத்தி வருகிறது. இந்த மரகத பூஞ்சோலையின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தோரணம் பார்வையாளர்களை வெகு வாக கவரும் வகையில் உள்ளது. மரகத பூஞ்சோலையின் உள்ளே பல்வேறு வகையான பறவைகள் தாகத்தை தீர்க்க 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறுவர், சிறுமிகள் விளை யாட சிறுவர் பூங்காவும், பல்வேறு விளையாட்டு சாதனங்களும், சறுக்கு மரங்களும், ஊஞ்சலும் அமைக்கப் பட்டுள்ளன.

தெக்குப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் வாரம் இரு முறை அனைத்து செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றி செடிகளை பரா மரித்து வருகின்றனர். இந்த மரகத பூஞ்சோலையை கண்டு ரசிக்க பார்வை யாளர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

<div class="paragraphs"><p>நாட்றம்பள்ளி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ரூ.24 லட்சம் செலவில் உருவாகி வரும் மரகத பூஞ்சோலை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. </p></div>
காமேனி மரணமும் தாக்கமும்: ஈரானில் ஒருபக்கம் துக்கம், மறுபக்கம் கொண்டாட்டம் ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in