சீனர்களுக்கு சுற்றுலா விசாவுக்கான தடையை நீக்கியது இந்தியா

சீனர்களுக்கு சுற்றுலா விசாவுக்கான தடையை நீக்கியது இந்தியா
Updated on
1 min read

புதுடெல்லி: உல​கம் முழு​வதும் உள்ள சீனர்களுக்கு மீண்​டும் சுற்​றுலா விசா வழங்க மத்​திய அரசு முடி​வெடுத்​துள்​ளது. கடந்த 2020-ம் ஆண்டு எல்​லை​ கட்​டுப்​பாட்டு கோட்​டருகே சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்​தனர். அவர்​களை இந்​திய வீரர்​கள் தடுத்து நிறுத்​தினர். மேலும், இந்​திய எல்​லை​யில் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இருதரப்​புக்​கும் இடை​யில் கடும் மோதல் ஏற்​பட்​டது.

இதில் இந்​திய வீரர்​கள் 20 பேரும் சீன வீரர்​கள் 40 பேரும் உயி​ரிழந்​த​தாக தகவல்​கள் வெளி​யா​யின. இதையடுத்து சீனா​வுக்​கான விமானப் போக்​கு​வரத்​து, சீன குடிமக்​களுக்கு விசா போன்​றவை ரத்து செய்​யப்​பட்​டன. அத்​துடன் சீனா​வில் பல செயலிகளுக்கு இந்​தி​யா​வில் தடை விதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்​திய - சீன உறவை மீண்​டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர இருதரப்​பினரும் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தனர். அதன்​படி, எல்​லை​யில் உள்ள படைகளை திரும்ப பெறு​வதென கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் உடன்​பாடு எட்​டப்​பட்​டது. அதன்​பின் பிரதமர் மோடி​யும் சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் ரஷ்​யா​வின் கசன் நகரில் சந்​தித்து இருதரப்பு உறவை மேம்​படுத்​து​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அதன் பலனாக இரு நாடு​களும் நேரடி விமானப் போக்​கு​வரத்தை கடந்த அக்​டோபர் மாதம் மீண்​டும் தொடங்​கின. மேலும், திபெத்​தில் கைலாஷ் மானசரோவர் யாத்​திரைக்கு சீனா அனு​மதி வழங்​கியது. அடுத்​தக்​கட்​ட​மாக கடந்த ஜூலை மாதம் சீனா​வில் உள்ள சீனர்​களுக்கு சுற்​றுலா விசா வழங்க முடி​வெடுக்​கப்​பட்​டது.

அதன்​படி சீன தலைநகர் பெய்​ஜிங், ஷாங்​காய், குவாங்​சு, ஹாங்​காங் ஆகிய நகரங்​களில் உள்ள இந்​திய தூதரகங்​கள் மூலம் இந்​திய சுற்​றுலா விசா பெற அனு​ம​திக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், உலகம் முழு​வதும் உள்ள சீனர்​கள், அந்​தந்த நாட்​டில் உள்ள இந்​திய தூதரகங்​கள் மூலம் சுற்​றுலா விசா பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து அதி​காரப்​பூர்வ அறி​விப்பு மத்​திய அரசிடம் இருந்து இன்​னும் வெளி​யாக​வில்​லை. ஏற்​கெனவே அரிய வகை தனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்க சீனா ஒப்​புக்​ கொண்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

சீனர்களுக்கு சுற்றுலா விசாவுக்கான தடையை நீக்கியது இந்தியா
காசாவில் 25 மீ. ஆழத்தில் 7 கி.மீ. நீள சுரங்கம்: இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட வீடியோ வைரல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in