மாமல்லபுரம் சிற்பங்களை இன்று இலவசமாக கண்டு ரசிக்கலாம்

மாமல்லபுரம் சிற்பங்களை இன்று இலவசமாக கண்டு ரசிக்கலாம்
Updated on: 
1 min read

மாமல்லபுரம்: பல்லவர் கால கலைச்​சின்​னங்​களை மாமல்​லபுரத்​தில் இன்று (நவ.19) சுற்றுலாப் பயணிகள் இல​வச​மாக கண்டு ரசிக்​கலாம்.

மாமல்​லபுரத்​தில் உள்ள பல்​லவ மன்​னர்​களின் சிற்​பக்​கலையை பறைசாற்​றும் கடற்​கரை கோயில், ஐந்​துரதம், அர்​ஜுனன் தபசு, கிருஷ்ண மண்​டபம், புலிக்​குகை மற்​றும் வெண்​ணெய் உருண்டை பாறை உள்​ளிட்​ட​வற்றை, தொல்​லியல்​துறை பராமரித்து பாது​காத்து வரு​கிறது. இவற்றை சுற்​றுலாப் பயணிகள் கண்டு ரசிப்​ப​தற்கு உள்​ளூர் சுற்​றுலாப் பயணிகளுக்கு ரூ.40, வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணிகளுக்கு தலா ரூ.600 கட்​ட​ண​மாக நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நவம்​பர் 19 முதல் 25-ம் தேதி வரையில் உல​கப்பாரம்பரிய வாரம் கொண்​டாடப்​படுவ​தால், பாரம்​பரிய வாரத்​தின்முதல் நாளான இன்று (நவ.19) கலைச்​சின்​னங்​களை சுற்​றுலாப் பயணிகள் அனைவரும் கட்​ட​ணமின்றி இல​வச​மாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் சிற்பங்களை இன்று இலவசமாக கண்டு ரசிக்கலாம்
தீபத்தூணில் தீபம் ஏற்றலாமா? - உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை: திருப்பரங்குன்றத்தில் போலீஸார் குவிப்பு

X