“ராமர் பாலத்தை பார்வையிட படகு சேவை”: மன்னார் ஆட்சியர் கனகேஸ்வரன் தகவல்

தலைமன்னாரிலிருந்து மணர் தீடைக்கு கடந்த வாரம் நடைபெற்ற முன்னோட்ட படகு சேவை

தலைமன்னாரிலிருந்து மணர் தீடைக்கு கடந்த வாரம் நடைபெற்ற முன்னோட்ட படகு சேவை

Updated on: 
1 min read

ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை உள்ள மணல் திட்டுகளில் (ராமர் பாலம்), இலங்கைக்கு சொந்தமான மணல் திட்டுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறை சார்பாக அக்டோபர் 15 முதல் படகு சேவை தொடங்கப்படவுள்ளது.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில் 13 மணல் திட்டுகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 திட்டுகள் இந்தியாவிற்கும், 7-ல் இருந்து 13 வரையிலான திட்டுகள் இலங்கைக்கும் சொந்தமானவை ஆகும்.

<div class="paragraphs"><p>தலைமன்னார் அருகே உள்ள மணல் தீடை</p></div>

தலைமன்னார் அருகே உள்ள மணல் தீடை

இலங்கை அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டின் எல்லை பகுதிக்குள் உள்ள 7 முதல் 13ம் மணல் திட்டுகள் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சேவையை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. கடந்த வாரம் மணல் திட்டுக்களுக்கான (ராமர் பாலம்) முன்னோட்ட படகு சேவை தலைமன்னாரிலிருந்து நடைபெற்றது. இதில் இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், மன்னார் மாவட்ட ஆட்சியர் கனகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கனகேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் கனகேஸ்வரன் கூறியதாவது, “அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் படகு சேவை தொடங்கப்படும்.

ஒரு படகில் ஏழு பேர் வரையிலும் பயணிக்கலாம். இதற்காக ஒருவருக்கான கட்டணம் ரூ.2,500 (இந்திய மதிப்பு ரூ.725) ஆகும். மணல் தீட்டுகளுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் சென்று நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன” என ஆட்சியர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தலைமன்னாரிலிருந்து மணர் தீடைக்கு கடந்த வாரம் நடைபெற்ற முன்னோட்ட படகு சேவை</p></div>
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in