

கிருஷ்ணகிரி: கோடை விடுமுறையால், கிருஷ்ணகிரி அணை மற்றும் பூங்காவில் நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது குழந்தைகளுடன் நேற்று கிருஷ்ணகிரி அணைக்குச் சுற்றுலா வந்திருந்தனர்.
அணை பகுதியைச் சுற்றிப் பார்த்த பின்னர் அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், பூங்காவில் உள்ள மான்கள், செயற்கை நீரூற்றுகளைக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் சுடச்சுட விற்பனையாகும் மீன் வறுவல் மற்றும் மதிய உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இதேபோல, அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிலும் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. மேலும், அங்குள்ள படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் பயணிகள் பரிசல் பயணம் சென்றனர்.