

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களையெல்லாம் காண யுனஸ்கோவிடம் ‘பாரம்பரிய’ அந்தஸ்தை பெற்ற நீலகிரி மலை ரயில் மூலமே அதிகமான சுற்றுலா பயணிகள் உதகை வருகின்றனர். அடர்ந்த காடுகளின் நடுவே வளைந்து நெளிந்து வரும் இந்த ‘குட்டி’ ரயிலில் பயணிக்க நம் நாட்டை சேர்ந்தவர்களை விட வெளி நாட்டவர்களே அதிகம் விரும்புகின்றனர்.
கோடநாடு காட்சி முனை: கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனை உள்ளது. கோத்தகிரியில் இருந்து 20.கி.மீ., தூரம் பயணித்தால் கோடநாடு காட்சி முனையை அடையலாம். இங்கிருந்து தெங்குமரஹாடா, பவானி அணை மற்றும் ரங்கசாமி மலை ஆகியவற்றை காணலாம். கூடலூர் அருகே ஊசி மலை காட்சி முனை, தவளை மலை காட்சி முனை ஆகியவை உள்ளன.
கூடலூரில் இருந்து 10 கி.மீ., உதகையில் இருந்து 40 கி.மீ., தூரம் பயணித்தால் இந்த காட்சி முனைகளை அடையலாம். மேலும், டால்பின் நோஸ் காட்சி முனை, லேம்ஸ் ராக் காட்சி முனை ஆகியவை உள்ளன. இவற்றை குன்னூர் பகுதியில் இருந்து தனியார் வாகனங்கள் மற்றும் அரசு சுற்றுப் பேருந்துகளின் மூலம் சென்று பார்க்கலாம்.