

சென்னை: சென்னையிலிருந்து காசி, கயா, திரிவேணி சங்கமம், ஆக்ரா, மதுராஆகிய ஆன்மிக தலங்கள் மற்றும் டெல்லிக்கு சுற்றுலா செல்ல சீனிவாசா டூர் ஆபரேட்டர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சேஷாத்ரி கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் பல ஆண்டுகளாகக் குறைந்த கட்டணத்தில் எண்ணற்ற பயணிகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளோம். தற்போது குறைந்த கட்டணத்தில் வட மாநிலங்களில் உள்ள ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு 9 நாள் ரயில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
சென்னையிலிருந்து மே 22, ஜூன் 19, ஜூலை 17, ஆக. 7 ஆகிய தேதிகளில் ரயிலில் அலகாபாத், திரிவேணி சங்கமம், நேரு பிறந்த வீடான ஆனந்த பவன், கயா கிருஷ்ணர் கோயில், புத்த கயா கோயில், வாரணாசி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்கிறோம். ரயில், பஸ், தங்கும் வசதி, உணவு அனைத்தும் சேர்த்து ஒருவருக்கு ரூ.10,900 மட்டுமே. 12 பேரைச் சேர்த்தால் ஒருவர் இலவசமாக வரலாம்.
மேலும் 16 நாள் சார்தாம் யாத்திரையான கங்கோத்ரி, யமுனோத்ரி,பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். குரூப் சுற்றுலாக்களும் குறைந்த கட்டணத்தில் நடத்தித் தரப்படும். மேலும் விவரங்களுக்கு 9384854560 / 61 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.