உதகையிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் கழிப்பிட வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி

உதகையிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் கழிப்பிட வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி
Updated on
1 min read

உதகை: கோடை சீசனையொட்டி நீலகிரிமாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும்சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்கதமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றிவெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகன நிறுத்துமிடங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவசதிகள் இல்லை. உதகை நகரிலுள்ள தண்ணீர் ஏடிஎம்-கள்பெரும்பாலானவை இயங்காத நிலை உள்ளது. இயங்கும் ஏடிஎம்-களின் தண்ணீரின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு, சுற்றுப் பேருந்துகள் அல்லது ஆட்டோ, டாக்ஸியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சுற்றுலா ஆர்வலர்கள்கூறும் போது, "சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ-கழிப்பறைகள் உடனடியாக அமைக்க வேண்டும், ஜி.பி.எஸ். மூலமாக கழிப்பறைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து, சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுசெய்ய வேண்டும். தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இ-கழிப்பறைகளுக்கு, பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் தனியாக வர்ணம்பூசப்பட வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in