

கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஏப்.22) புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது வரை 73 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பரவலை தடுக்க கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
கோடை சீசனை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணி களுக்கு கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு சுங்கச்சாவடி அருகே சுற்றுலாப் பயணிகளிடம் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வும், சுகாதாரத் துறையினர் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.