

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் உள்ள ஓராவி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடிச் சோலை அருவி, வட்டக்கானல் பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இவை தவிர இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன. அவை எங்கு இருக் கின்றன என்றே பலருக்கும் தெரி யாது. இவற்றில் ஒன்று தான் ஓராவி அருவி. கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் வழியில் பேத்துப் பாறையை அடுத்துள்ள பாரதி அண்ணா நகர் பகுதியில் ஓராவி அருவி அமைந்துள்ளது.
ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த 2019-ல் இந்த அருவி சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு சென்று வர பாதை வசதி ஏற்படுத்த வில்லை. அருவியை அருகில் சென்று பார்க்க நினைப்பவர்கள் தனியார் நிலங்கள் வழியாகத் தான் செல்ல முடியும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த அருவிக்கு உள்ளூர் மக்கள் உதவியுடன் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது சென்று வருகின்றனர்.
கோடை சீசனையொட்டி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி யுள்ளனர். ஏற்கெனவே உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து சலித்துப் போன சுற்றுலா பயணி கள், புதிய சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்கும் வகையில் இந்த அருவிக்கு செல்ல பாதை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.