கோடை வெப்பத்தை தணிக்க தஞ்சாவூர் பெரிய கோயிலில் தண்ணீர் தெளிக்கும் பணியாளர்கள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் கோயில் வளாகம் முழுவதும் நேற்று தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோயில் பணியாளர். படம் ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் கோயில் வளாகம் முழுவதும் நேற்று தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோயில் பணியாளர். படம் ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோயிலில் தண்ணீர் தெளிக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயலுக்கு பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘பெரிய கோயில் வளாகத்தில் பகல் நேரத்தில் அதிகமாக வெப்பம் இருப்பதால், பக்தர்கள் வெறும் காலில் நடந்து செல்வதில் சிரமம் இருந்தது. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் தேங்காய் நார் விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால் தேங்காய் நார் விரிப்புகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெப்பத்தை ஓரளவுக்கு குறைத்து வருகிறோம். இதற்காக கோயிலில் உள்ள போர்வெல் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணித்து வருகிறோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in