ஆரோவில் ஆதிசக்தி கலாச்சார மையத்தில் ஏப்.5 முதல் 13 வரை கலைவிழா
புதுச்சேரி: ஆரோவில் செல்லும் சாலையில் நாடக கலை ஆராய்ச்சிக்கான ஆதி சக்தி கலாச்சார மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தை நிறுவிய வீனாபாணி நினைவாக ஆண்டுதோறும் கலை விழா நடக்கிறது. இந்த ஆண்டு வரும் 5-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை கலை விழா நடக்கிறது.
இதுகுறித்து வினய் குமார் கூறியதாவது: ஆதிசக்தி மையம் எப்போதும் பன்மைத்துவ உலக கண்ணோட்டங்களை ஊக்குவிக்கும். மேலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி அணுகு முறைகளைக் கொண்ட கலைஞர்களின் பல செயல்திறன் துறைகளை ஒன்றிணைத்து, மகிழ்வான மற்றும்வளமான இடத்தை உருவாக்குகிறது.
வரும் 5-ம் தேதி வீனாபாணி நினைவாக கலை விழா தொடங்குகிறது. புகழ்பெற்ற கலைஞர்களான சுபா முத்கல், சித்தார்த்தா பெல் மன்னு, டென்மா ஆகியோரின் இசை, அனிதா ரத்னம், பிஜயினி சத்பதி மற்றும் காளி பில்லி ஆகியோரின் நடனம் போன்றவை தினமும் இரவு 7 மணிக்கு நடக்கிறது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழா அனைவருக்கும் ஒருதுடிப்பான அனுபவமாக இருக்கும். இது ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாரம்பரிய மற்றும் சமகால வகைகளைக் காண்பிக்கும். அனுமதி இலவசம் என்று தெரிவித்தார். ஆதிசக்தியின் நிர்வாக அறங் காவலர் நிம்மி உடனிருந்தார்.
