நெதர்லாந்தில் இருந்து கொடைக்கானலுக்கு 800 லில்லியம் பூச்செடி கிழங்குகள் வரவழைப்பு

நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் பூச்செடி கிழங்குகளை கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் பூச்செடி கிழங்குகளை கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானல் மலர் கண்காட்சிக்காக நெதர்லாந்தில் இருந்து 800 லில்லியம் பூச்செடி கிழங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொடைக்கானலில் நகரின் மையப் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது.

(கோப்புபடங்கள்) சிவப்பு நிறத்தில்<br />பூத்துள்ள லில்லியம் மலர்கள்.
(கோப்புபடங்கள்) சிவப்பு நிறத்தில்
பூத்துள்ள லில்லியம் மலர்கள்.

இங்கு மே மாதம் நடக்கவுள்ள 60-வது மலர் கண்காட்சிக்காக, 3 கட்டமாக ஆயிரக்கணக் கான மலர்ச் செடிகளை நடவு செய்து ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். அதில் நெதர்லாந்து நாட்டில் மட்டும் பூக்கக் கூடிய லில்லியம் மலர்ச் செடிகள், தற்போது பிரையண்ட் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

(கோப்புபடங்கள்) மஞ்சள் நிறத்தில்<br />பூத்துள்ள லில்லியம் மலர்கள்.
(கோப்புபடங்கள்) மஞ்சள் நிறத்தில்
பூத்துள்ள லில்லியம் மலர்கள்.

மஞ்சள், சிவப்பு, நீலம் உட்பட ஐந்து வண்ணங்களில் பூக்கும் லில்லியம் மலர்ச் செடிகள் 800 தொட்டிகளில் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நடவு செய்யப்படும் லில்லியம் பூக்கள் மலர் கண்காட்சியின் போது பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் என தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in