

புதுடெல்லி: சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும், குறிப்பாக இளைஞர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. உள்ளூர் கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து இட்டுள்ள பதிவில், “நான் உங்கள் அனைவரையும் குறிப்பாக இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா வாய்ப்புகளை பறைசாற்றும் இந்த தனித்துவமான முயற்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.