Published : 06 Feb 2023 08:32 PM
Last Updated : 06 Feb 2023 08:32 PM

கடற்கரையில் காவலுக்கு நிற்கும் ‘ஏஐ காப்பான்கள்’ - கோவாவில் புது முயற்சி

பனாஜி: இந்தியாவின் சுற்றுலா மையங்களில் ஒன்றான கோவாவில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செல்ஃப் டிரைவிங் ரோபோ மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவா அரசால் உயிர் காக்கும் பணியை மேற்கொண்டு வரும் த்ரிஷ்டி மரைன் என்ற அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இன்றைய உலகில் அனைத்தும் டெக் மயமாகி வருகிறது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோ மற்றும் கண்காணிப்பு அமைப்பு கோவாவின் கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த ரோபோவின் பெயர் Aurus மற்றும் கண்காணிப்பு அமைப்பின் பெயர் Triton என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீர்நிலைகளில் உயிர்காக்கும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருபவர்களுக்கு தக்க நேரத்தில் தகவல் கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சுற்றுலா நிமித்தமாக வரும் மக்கள் ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கினால் எச்சரிப்பது, பெரிய அலைகள், நீச்சல் செய்யக்கூடாத பகுதிகள் மற்றும் அங்கு நிலவும் சூழல் குறித்து இது தகவல் கொடுக்கும் என தெரிகிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் அதுகுறித்த தகவலை நிகழ் நேரத்தில் தெரிவிக்குமாம். அதுவும் அது பன்மொழி நோட்டிபிகேஷன் என சொல்லப்படுகிறது.

இதில் Aurus ரோபோ வெறும் ரோந்து பணியை மட்டும் மேற்கொள்ளாமல் பொருட்களை சுமந்து செல்லவும் உதவுமாம். அதிகபட்சம் 100 கிலோ எடையை இது சுமந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 110 மணிநேரம் கடற்கரையில் இது தன் பணியை செய்துள்ளதாம். இதனை டெக் வல்லுநர்கள் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 100 Triton கண்காணிப்பு அமைப்பு மற்றும் 10 Aurus ரோபோவை களத்தில் இறக்க உள்ளதாம் அந்த அமைப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x