இந்தியாவில் சுற்றுலாவுக்கு சிறந்த இடம் கேரளா - நியூயார்க் டைம்ஸ் பரிந்துரை

இந்தியாவில் சுற்றுலாவுக்கு சிறந்த இடம் கேரளா - நியூயார்க் டைம்ஸ் பரிந்துரை
Updated on
1 min read

புதுடெல்லி: புதிய வருடம் தொடங்கியுள்ள தால், சுற்றுலா ஆர்வலர்கள், இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். இவர்களுக்காக, இந்தாண்டு சுற்றுலா செல்ல சிறந்த இடங்களாக, உலகம் முழுவதும் 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன், ஜப்பானில் உள்ள மோரியேகா, ஸ்காட்லாந் தில் உள்ள கில்மார்டின் கிளன், நியூசிலாந்தின் ஆக்லாந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா வில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரு தீவு, அல்பேனியாவில் உள்ள விஜோசா ஆறு, நார்வேயின் ட்ராம்சோ, இந்தியாவின் கேரளா மாநிலம் ஆகியவை உட்பட 52 இடங்கள் உள்ளன. இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு கடற்கரைகள், உப்பங்கழிகள், உணவு விடுதிகள், வைகாதஸ்தமி திருவிழா, குமரகோம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மரவன்துரத்து கிராமம் போன் றவை சிறப்பானவை என தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டைம் இதழின் பட்டியலிலும் கேரளா சுற்றுலாவுக்கான சிறந்த இடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகவும், இந்தியாவின் அழகான மாநிலங் களில் ஒன்று கேரளா எனவும் டைம் இதழ் குறிப்பிட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in