புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா
Updated on
1 min read

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலாக்களை நடத்தி வருகின்றன. புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு கயா, வாரணாசி, அலகாபாத் ஆகிய ஆன்மிகத் தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 நாள் சுற்றுலா செப்டம்பர் 24-ம் தேதி மதுரையில் தொடங்குகிறது. விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து தங்குமிடம், உணவு, பயணக் காப்பீடு உட்பட ஒருவருக்கு ரூ.39,300 வசூலிக்கப்படும்.

அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளம் மூலமும் பயணச் சீட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in