

ஆந்திராவில் விசாகா ஏஜென்சி பகுதியில் உள்ள மலைக்கிராமமான லம்பாசிங்கியில் வெப்ப நிலை பூஜ்ஜியமாகி குளிர் உச்சநிலையை எட்டியுள்ளது.
கடல் மட்டத்திற்கு 3,000 அடி மேலே உள்ளது லம்பாசிங்கி. இங்கு வெப்ப நிலை பூஜ்ஜியத்தை எட்டுவதால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
கடந்த வெள்ளியன்ற்கு 7 டிகிரி செல்சியஸாக இருந்த வெப்ப நிலை சனியன்றுஜ் 2 டிகிரியாகக் குறைந்து பிறகு ஞாயிறன்று 0 டிகிரியாக ஜில்லிட்டது.
பனிமூட்டம் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் இருந்து வந்தது. காலை 11 மணியளவில் சூரியன் ஒளி விடத் தொடங்கிய பிறகும் குளிர் குறையாமல் இருந்து வருவதால் மக்கள் அங்கு தீமூட்டி உஷ்ணப்படுத்திக் கொள்கின்றனர்.
விசாகப்பட்டிணத்திலிருந்து 110 கிமீ தூரத்தில் உள்ளது லம்பாசிங்கி. காட்டுப் பகுதிகள் மற்றும் மலைச்சாலை வழியாக 4 மணிநேர பயணம். இங்கு ஒரு சில தேநீர் கடைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
சுற்றுலாப்பயணிகள் தங்கி மகிழ்வதற்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை.
இதனால் சாலையில் சில மணி நேரங்கள் செலவழித்துவிட்டு திரும்ப வேண்டிய நிலையே சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மாநில அரசு இங்கு இன்னு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.