கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து விட்டதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் நாளை நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in