

உலகில் பல நாடுகளுக்கும் நாம் பயணம் செய்திருப்போம், செய்யவும் இருப்போம். ஆனால் ஒரு சில நாடுகள் மட்டும் ஒரு வைப்ரேஷனை நமக்குள் உணர வைக்கும். அப்படி ஒரு நாடு தான் கம்போடியா. முன்னொரு காலத்தில் கம்பூசியா என்றும், இன்று கம்போடியா என்றும் அழைக்கப்படும் இந்நாட்டில் தமிழ் மண்ணின் வாசனை நிறையவே வீசுகிறது.
விமான நிலையத்திலிருந்து தலைநகர் நாம்பென்- னிற்குள் நுழையும் போதே அண்ணாந்து பார்க்க வைக்கும் பிள்ளையார் சிலை. வீடுகளிலும் அலுவலகங்களிலும் , பெரும்பாலும் காணப்படும் அனுமன் மற்றும் விநாயகர் சிலையும், வழிபாடும் இரு கரம் கூப்பி தலை குனிந்து வரவேற்கும் பண்பாடு, உணவு பழக்கம், பெரும்பாலான பெயர்களில் சேனாதிபதி... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.