

ராமேசுவரம்: ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் தொடர்ந்து மழையினால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம் பாம்பன், மண்டபம் உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமையில் இருந்து பரவலான மழை பொழிந்தது.
ராமேசுவரத்திற்கு கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், தொடர் மழையினால் ராமேசுவரம் கோயிலுக்கு பக்தர்களும், தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைவாகக் காணப்பட்டது.