யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெபரட்ணம்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெபரட்ணம்

கச்சத்தீவை சுற்றுலா தலமாக்க யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு

Published on

ராமேசுவரம்: கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்​கை​யில் அதிபர் அநுர குமார திசா​நாயக்க கடந்த வாரம் கச்​சத்​தீவுக்கு பயணம் மேற்​கொண்​டார். இந்​தப் பயணத்​தின்​போது உடன் சென்ற அந்​நாட்டு மீன்​வளத் துறை அமைச்சர் ராமலிங்​கம் சந்​திரசேகர், அதிபரின் கச்​சத்​தீவு பயணம் குறித்து, “இலங்​கை​யில் சுற்​றுலாத் துறையை மேம்​படுத்த பல்​வேறு திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன்படி, யாழ்ப்​பாணத்தில் இருந்து நெடுந்​தீவுக்கு தற்​போது சுற்​றுலா பயணி​கள் வரும் நிலை​யில், அதனை கச்​சத்​தீவு வரை நீட்​டிப்​ப​தற்​கான சாத்​தி​யக்​ கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்​ளப்​பட்டது” என்றார்.

இது குறித்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெபரட்ணம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கச்சதீவு புனிதமான ஒரு தீவு. அங்கே புனித அந்தோணியாரின் திருத்தலம் உள்ளது. இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி புனித அந்தோணியாரின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். கச்சத்துவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றப்படுவதை நாங்கள் எந்த விதத்திலும் விரும்பவில்லை.

புனித தலத்தினுடைய புனிதத்துவம் நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டும். கச்சத்தீவு, யாழ்ப்பாணம் மறைமாவட்டத்துக்கு கீழே வருகின்ற திருத்தலமாக உள்ளது. ஆகவே அதிபர் அநுர குமார திசாநாயக்க இதுகுறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்டத்துடன் கலந்துரையாடுவார் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in