மாமல்லபுரம் | சர்வதேச காற்றாடி திருவிழா தொடக்கம்

தமிழக சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சர்வதேச பட்டம் விடும் விழாவை அமைச்சர்கள் தாமோ.அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சர்வதேச பட்டம் விடும் விழாவை அமைச்சர்கள் தாமோ.அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Updated on
1 min read

மாமல்லபுரம்: ​மாமல்​லபுரத்தை அடுத்த திரு​விடந்தை கடற்​கரைப் பகு​தி​யில் சர்​வ​தேச காற்​றாடி திரு​விழா தொடங்​கியது. இந்த திரு​விழாவை அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், தா.மோ. அன்​பரசன் ஆகியோர் தொடங்கி வைத்​தனர். தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை மற்​றும் குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்​து, 4-வது முறை​யாக நடத்​தும் சர்​வ​தேச காற்​றாடி திரு​விழா நேற்று மாமல்​லபுரத்தை அடுத்த திரு​விடந்​தை​யில் தொடங்​கியது. இத்திருவிழா 4 நாட்​களுக்கு நடக்​கிறது.

இதில், மலேசி​யா, தாய்​லாந்​து, சுவிட்​சர்​லாந்​து, வியட்​நாம் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வில் உள்ள பல்​வேறு நகரங்​களில் காற்​றாடி பறக்க விடு​வ​தில் கைதேர்ந்த வீரர்​கள், வீராங்​க​னை​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் 10 அணி​களாக பிரிந்து காற்​றாடிகளை பறக்க விட்​டனர்.

இதில், அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், தா.மோ. அன்​பரசன் ஆகியோர் பங்​கேற்று காற்​றாடிகளை பறக்க விட்டு தொடங்கி வைத்​தனர். முதல் நாளான நேற்று வானில் பறந்த காற்​றாடிகளை சுற்​றுலாப் பயணி​கள் தங்​களது செல்​போனில் புகைப்​படம் எடுத்து மகிழ்ந்​தனர்.

இத்திருவிழா தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்க உள்​ளது. இதில், ஆட்​சி​யர் சினே​கா, எம்​எல்​ஏக்​கள் பாலாஜி, வரலட்​சுமி, திருப்​போரூர் வட்​டாட்​சி​யர் சரவணன், தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்சி கழக பொது மேலா​ளர் கவி​தா, மண்டல மேலா​ளர் வெங்​கடேசன், மாமல்​லபுரம் சுற்​றுலா அலு​வலர் சக்​திவேல், தமிழ்​நாடு ஓட்​டல் மேலா​ளர்​ அன்​பு உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in