குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இஞ்சினில் மலை ரயில் இயக்கம்

குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இஞ்சினில் மலை ரயில் இயக்கம்
Updated on
1 min read

குன்னூர்: குன்னூரில் இருந்து உதகைக்கு மலை ரயில் புதிய டீசல் இஞ்சின் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டுகள் கடந்தும் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில் பழமை மாறாமல் தற்போதும் இயங்கி வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் ரயில் பயணம் மேற்கொள்ள குன்னூர் வருகை புரிந்தனர். ஆனால், குன்னூரில் இருந்து உதகைக்கு சாதாரண டீசல் இஞ்சின் இயக்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக, டீசலில் இயங்கும் புதிய எக்ஸ் கிளாஸ் நீராவி இஞ்சின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு பழைய காலத்தில் இயக்கப்பட்டது போன்று இயக்கப்பட்டது. இனி எதிர்வரும் கோடை சீசனுக்கு இதே இஞ்சினை வைத்து மலை ரயிலை இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in