குமரியில் சுற்றுலா பயணிகள் கவரும் காந்தியும், காமராஜரும் பேசும் சிலை!

குமரியில் சுற்றுலா பயணிகள் கவரும் காந்தியும், காமராஜரும் பேசும் சிலை!
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கடரையில் காந்தி நினைவு மண்டப வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளும், கர்மவீரர் காமராஜரும் பேசிக்கொண்டு இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து பார்த்துச் செல்கின்றனர்.

அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டும், கன்னியாகுமரி சுற்றுலா மையத்தினை உலகதரத்திற்கு உயர்த்தும் வகையில் கன்னியாகுமரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் காலை சூரிய உதயம், மாலை சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டுகளிப்பதற்கு அப்பகுதிகளில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி சாலைகள், பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், கழிப்பறைகளை வசதிகள், நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதிகளில் நிழற்குடைகள் அமைத்தும், குறிப்பாக சுற்றுலா வரும் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா, சிறுவர் பூங்கா, சுனாமி பூங்கா ஆகியவற்றினை சீரமைத்து, பொழுதுபோக்கு விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 1921-ம் ஆண்டு மதுரையில் மகாத்மா காந்தியடிகளை காமராஜர் முதல்முறையாக சந்தித்தார்கள். கர்மவீரர் காமராஜர், காந்தியடிகளின் கொள்கையால் கவரப்பட்டார். அவர்கள் இருவரும் சந்தித்த நிகழ்வை பறைசாற்றும் விதமாக மகாத்மா காந்தியடிகளும், கர்மவீரர் காமராஜரும் பேசுவது போன்ற சிலை காந்தி நினைவு மண்டப வளாகத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் உள்ள பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையினை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in