சென்னையில் இருந்து குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு சிறப்பு சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு

சென்னையில் இருந்து குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு சிறப்பு சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இருந்து குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நகரங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் விதமாக, சிறப்பு சுற்றுலா திட்டங்களை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில், கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில், சென்னையில் இருந்து குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு சுற்றுலா திட்டங்களை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்து உள்ளது.

அதன் விவரம்: சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சிறப்பு விமானம் டிச.6-ம் தேதி புறப்படுகிறது. இங்கு சர்தார்வல்லபாய் பட்டேல் சிலை, நிஷ்கலங்க் மகாதேவ் கோவில், ஸ்ரீ சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில், கிர் தேசியப்பூங்கா, போர்பந்தர், துவாரகா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர். 9 நாள்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.43,000 கட்டணம் ஆகும்.

இதுபோல, சென்னையில் இருந்து ஒடிஸா மாநிலம் புவனேஸ்வருக்கு சிறப்பு விமானம் டிச.19-ம் தேதி சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்ட உள்ளனர். இங்கு கோனார்க், பூரி ஜெகன்நாதர் கோவில், சில்கா ஏரி ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். 5 நாட்கள் கொண்ட சுற்றுலா பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.38,000 கட்டணம்.

இதுதவிர, சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணம் ஜன.12-ம்தேதி தொடங்குகிறது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மர், பிகானேர், புஷ்கர், அஜ்மீர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.7 நாள்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ,45,000 ஆகும். இதுதவிர, சென்னையில் இருந்து இந்தோனசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களைப் பெற 9003140680, 9003140682 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in