

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று (17-ம் தேதி) வரை மிதமான மழை நீடிக்கும் எனவும், 18, 19-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை கருத்தி்ல் கொண்டு உயிர் சேதம், பொருள்சேதம் ஏற்படாத வகையில் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்செரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்குமாறும், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை நேரங்களில் மரங்கள், மி்னகம்பங்கள், நீர்நிலைகள் அருகே செல்லவேண்டாம் என்றும், மழை நேரத்தில் தண்ணீர்வரத்து அதிகமாக வர வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம் எனவும், கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனவும் குமரி மாவட்ட ஆட்சியர் தர் வலியுறுத்தியுள்ளார்.